top of page

சேலத்தின் சங்ககிரி மலை கோட்டை

தமிழகத்திற்கு சேலம் ஒரு முக்கியமான மாநகராட்சி அதே மாதிரிதான் சங்ககிரியும் சேலத்துக்கு மிக மிக முக்கியமான ஒரு ஊர். இன்னைக்கு சங்ககிரி ரொம்பவே அமைதியான ஒரு ஊரா இருக்கலாம், ஆனா சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னாடி ஒரு 1000 வருடம் எடுத்து பார்த்தோம்னா கொங்கு நாட்டிலேயே மிக மிக ஒரு முக்கியமான ஊரா சங்ககிரி பெரிய அளவில் விளங்கியிருக்கு. தமிழகத்திலேயே மிக உயரமான ஒரு கோட்டை அப்டினா நம்ம சேலம் சங்ககிரி கோட்டை, இந்த சங்ககிரி கோட்டையை வீடியோ எடுக்க சொல்லி நிறைய பேர் கமெண்ட் பண்ணிட்டே இருந்தங்க. நான் அதை பத்தி படிக்காத வரைக்கும் அதோட அருமை தெரியவில்லை. படிக்க ஆரம்பித்த பின்பு எப்போ எடுப்போம்னு ஆர்வமாக இருந்தது. ஏனா அவ்வளவு வரலாறு உறங்கிட்டு இருக்கு அந்த கோட்டையில்.


சங்ககிரிக்கு முன்னாடியே நிலக்கோட்டை, இரணியல் கோட்டை, நாமக்கல் கோட்டை, திண்டுக்கல் மலைகோட்டை, சங்கரபதி கோட்டை, கமுதி கோட்டை அப்படினு நிறைய கோட்டை எடுத்திருக்கோம் இருந்தாலும் சங்ககிரி எனக்கு ஒரு முக்கியமான வீடியோவாக இருக்கும் அப்படினு என் உள் மனசு சொல்லுச்சு. சேலம் சங்ககிரி கோட்டை அதை பத்தி எடுக்கலாம் முடிவு பன்றோம்; நம்ம தமிழ் நேவிகேசன் குழு. நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன் எங்க வீட்டில் இருந்து சங்ககிரி கோட்டைக்கு தோரயமாக 250 கிலோமீட்டர்; 4.30 மணி நேரம் ஆகும் அங்க போக. நாங்க நான்கு பேர் அதிகாலை 3.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்புறோம.;

நான் என்னோட கேமராமேன் சண்முகம், விக்னேஷ் அப்புறம் உதவிக்கு திலிப்;. நாங்க சங்ககிரிகிட்ட போகும்போது காலை 7.30 மணி, தூரத்தில் இருந்து பார்த்த போது மலை மிகவும் சின்னதாக இருந்தது. நம்ம சண்முகவும் விக்னேஷ்வும் சின்ன மலையா தான் ப்ரோ, சீக்கிரம் எடுத்திரலாம் 1 மணி நேரத்தில் முடிச்சிரலாம் என்று சொன்னாங்க, நான் பொறுமையாக இருங்க பக்கத்துல போய் பாக்கலாம் என்று சொன்னேன்; நான் சொன்ன மாதிரியே பக்கத்தில போக போக வாய் பொலந்து பார்த்தங்க, ஏனா சங்ககிரி அவ்வளவு பெரிய மலையா தெரிஞ்சது. விக்னேஷ் சாப்பிடாம ஏற முடியாதுனு சொல்லிட்டாரு, சங்ககிரி பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஒரு ஹோட்டல சாப்பிட்டோம்; நல்லவே இருந்துச்சு. அங்க சாப்பிட்டு ஏற சரியாக மணி 8.30.


சேலத்தில இருந்து சங்ககிரி சுமார் 45 கிலோமீட்டர் தொலைவு. இந்த கோட்டையில்; 10 வாசல்கள் உள்ளது ஒவ்வொரு வாசலுக்கும் ஒரு வரலாறு இருக்கு. முதல் வாசல் உள்ளுக்குள்ள பார்த்தா இவ்வளவு பிரம்மாண்டமா இருக்கேனு தான் தோனும் ஏன அங்க உள்ள அனைத்தும் கிரைனைட் கல் அவ்வளவு நுணுக்கமாக அடுக்கி அடுக்கி வலிமையாக கட்டி இருந்தாங்க


முதல் வாசல் பெயர் புலி முக வாசல், உள்ள போனதுமே மேல புலிமுகம் இருக்கும் அப்படியே உள்ள போனதும் இடது பக்கம் திரும்பும். இந்த கோட்டையில் பத்து வாசல் இருக்கும்னு சொன்னேன் ஆனா அந்த பத்து வாசலுமே நேர போகாது வளைந்து வளைந்து தான் போகும். ஏன்னா இது ஒரு போர் யுக்தி. நீங்க எதிரி நாட்டு படையா இருந்தா, வளைந்து வளைந்து போயி தான் போர் பண்ணணும், நம்ம நாட்டு படை எளிமையா நீங்க உள்ள வரப்ப தாக்கிருவாங்க அப்பவே அவ்வளவு நுணுக்கமாக யோசித்து கட்டியிருக்காங்க.


இரண்டாவது வாசல்ல நிறைய சிற்பங்கள் மற்றும் கோவில்கள் இருக்கு மிக நுணுக்கமாக சிலை செதுக்கியிருக்காங்க. ராமர், ஆஞ்சநேயர், சிவன், இன்னும் நிறைய சிற்பங்கள் எல்லாமே நுனுக்கமாக இருந்தது. காம கலைகளை குறிப்பிடக்கூடிய சிற்பங்களும் இருந்தது,

அந்த காலத்தில் இருந்தே காம கலைகளை தனிமைப்படுத்தி பார்க்க கூடாதுனு கோவில்களில் சிற்பங்களாக செதுக்கியிருக்காங்க. இரண்டாவது வாசலை கடந்து கொஞ்சம் நடந்து போனால் ஒரு கோவில் இருக்கும். அது வீரபத்திரர் கோவில; இன்னைக்கும் வழிபாடு நடந்து கொண்டு இருக்கிறது,


அந்த கோவிலில் நந்தி சிலை இருக்கு ஆனா அது உடைக்கப்பட்டு உள்ளது. அப்புறம் நிறைய கன்னட கல்வெட்டுகள் இருக்கு கோவில் அமைப்புகள் ரொம்பவே அற்புதமாக இருந்தது.


அடுத்தது மூன்றாவது வாசல் அந்த வாசல் பெயர் கடிகார வாசல். சூரிய வெளிச்சம் விழுவதை வைத்து நேரம் கணக்கிடலாமாம் அதனால தான் இதற்கு கடிகார வாசல்னு சொல்றாங்க. மூன்றாவது வாசல் தாண்டி போன பெரிய இடம் இருந்ததுங்க அங்கு ஓய்வு எடுத்தோம்


காலை மற்றும் மாலை நேரத்தை செலவிட நல்ல இடம்,; மலை மேல ஏறனும்னா காலையில போங்க 3 வாசல் தான் படப்பிடிப்பு எடுத்தோம் ஆனால் அதுக்கே எங்களுக்கு 1.30 மணி நேரம் ஆனது. கண்டன்ட் மட்டுமே இரண்டு நோட் வச்சிருக்கோம், அது போக வீடியோ எடுக்க நிறைய இடங்கள் இருந்தது அதனால தான் 1.30 மணி நேரம் ஆகிருச்சு


மூன்றாவது வாசல் தாண்டுன உடனே ஒரு வரதராஜ பெருமாள் கோயில் இருக்கு அதுக்கு பக்கத்திலே அம்மன் கோவில் ஒன்னு இருக்கு. அந்த அம்மன் கோவில் தான் இந்த கோட்டையில் மிக பழமையான கோவில.; நாங்க போகும் போது நடை சாத்தி இருந்தது. பக்கத்துல வேலை பார்த்துட்டு இருந்தாங்க அவங்க கிட்ட கேட்டேன் ஏன் நடை சாத்தி இருக்கு, அதுக்கு அவங்க சனிக்கிழமை மட்டும் தான் திறந்து இருக்கும் அப்படின்னு சொன்னாங்க அப்படியே வெளிய இருந்து பார்த்தோம் மிக அழகாக இருந்தது. கொடிமரம் இருக்கு, வீரபத்திரர் கோவில் கிட்ட ஒரு குளம் கூட இருக்கு.

பெருமாள் கோயிலை தாண்டி 5 நிமிடம் நடந்தால் 4வது வாசல் உங்களை வரவேற்கும், இதுக்கப்புறம் நீங்கள் மேலே செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். ஏனா நிறைய விஷ ஜந்துக்கள் அலைய கூடிய அடர்ந்த பாதை.


நான்காவது வாசல் பெயர் இரண மண்டபம், இது ஒரு சிறிய மண்டபம் தான் அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் ஐந்தாவது வாசல் வந்திரும். இது மிக முக்கியமான ஒரு வாசல். முதல் நான்கு வாசல் குன்னிவேட்டுவன் அப்படிங்கிற ஒரு வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது என்று நிறைய வரலாறுகள் கூறுகிறது. ஐந்தாவது மண்டபம் பெயர் புதுக்கோட்டை வாசல்.

புதிதாக கட்டப்பட்டதால் இதற்கு இந்த பெயர் புதுக்கோட்டை வாசல்னு வந்தது. அந்த இடத்தை சுற்றி பார்க்க 30 நிமிடம் ஆனது ஏனென்றால் அங்க மீன் சின்னத்தை நாங்க கண்டுபிடிச்சோம், இந்த சின்னம் பாண்டியர்களுடையது. தொல்லியல் துறை பாண்டியர்கள் கீழ் சங்ககிரி கோட்டை இருந்தது என்று கூறப்பிடவில்லை ஆனா நாங்க கண்டுபிடிச்சோம் எங்களுக்கு இது இன்னும் ஆர்வத்தை தூண்டி விட்டது.

பாண்டியர்கள் கிட்டையும் இந்த கோட்டை இருந்ததா? நான் ஆர்வமாக தேடும் போது என் கண்ணில் சிக்கியது என்ன தெரியுமா நம்ம மக்கள் அவர்கள் பெயர்களை எழுதி வைத்திருந்தது தான் அதை பார்க்கும் போது மனசு ரொம்ப வருத்தமா இருந்தது. கீழே இருந்து வரும் போதே பெயிண்ட் டப்பா கொண்டு வந்துருவாங்க போல,


இந்த மாதிரி வரலாற்று முக்கியமான இடங்களில் உங்க பெயரை எழுதாதீங்க அது மிகவும் ஒரு முட்டாள்தனம், இப்படி பண்றது நம்ம வரலாற்றை நாமளே அழிக்கிறதுக்கு சமம். 5வது வாசலை அப்படியே தாண்டியதும் இடது பக்கம் ஒரு தர்கா இருந்தது அங்க ஒரு சுரங்கம் இருக்கும் உள்ளூர் மக்கள் சொல்றாங்க ஆனால் நாங்க அங்கு போகல ஏனா அங்க போனா நேரம் அதிகமாயிடும் அதனால ஆறாவது வாசல் நோக்கி புறப்பட்டோம். இந்த ஐந்தாவது வாசல் வரை நன்றாக இருந்தது பாதை, ஆறாவது வாசலுக்கு போற பாதை நிறைய செடிகள் வளர்ந்திருந்தது.


ஆண்கள் பெண்கள் யார் சென்றாலும் உடம்ப நல்ல மூடிக்கிற அளவுக்கு உடை போட்டுட்டு வரணும். 6வது வாசலுக்கு போற வழியில இடது பக்கம் ஒரு சின்ன மண்டபம் வந்தது அது படைவீரர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட மண்டபம், உள்ளே ரொம்பவே இருட்டாக இருந்துச்சு எதுமே தெரியல


உள்ள டார்ச் அடிச்சும் தெரியல, கேமரால iso ரொம்ப கூட்டி வச்சு அந்த ஷாட் எடுத்தோம், அப்போ ஒரு சத்தம் tamilnavigationஅ tamilnavigationஅ அப்படினு ஒரு சத்தம் வந்தது, எனக்கு ஒரு ஆச்சரியம் கலந்த ஒரு பயம், இந்த நடு மலையில யாருடா நம்மல தேடுறதுனு. நான் முதல் வாசல்ல வீடியோ எடுக்கும் போது instagram la story போட்டேன் அதை பார்த்து Asi யாரும் வந்துட்டாங்களோனு நினைச்சேன்,

ஆனா அந்த ஊரை சேர்ந்த kutty story nu youtube channel வைத்திருக்கும் ஒருத்தர் எங்கள பார்க்க வந்திருந்தாரு. அவர் பெயர் கோகுல், அவரு எங்களுக்கு சங்ககரி கோட்டை பத்தின ஒரு புத்தகம் கொடுத்தாரு அதில இன்னும் நிறைய விஷயங்கள் கோட்டை பத்தி இருந்தது, அந்த புத்தகத்தை பாத்திட்டு இன்னும் நிறைய எடுக்கலாம்னு நினைச்சோம். அவரும் கூடவே வந்தாரு, நாங்க ஆறாவது வாசல் நோக்கி போனோம்.


அந்த ஆறாவது வாசல் பெயர் ரொக்க திட்டி வாசல் அப்படினு சொல்லுவாங்க அங்க ஒரு பிள்ளையார் சிற்பம் வைத்திருந்தாங்க. அதை தாண்டுனதும் ஒரு பள்ளத்தில் ஒரு சுனையில் தண்ணீர் நன்றாகவே இருந்தது.


பக்கத்தில் சிவ பெருமான் சிற்பம் பொறிக்கப்பட்டு இருந்தது அந்த சுனையில் இருந்து தண்ணீர் குடிக்கலாம் நன்றாகவே இருந்தது. சங்ககிரி கோட்டை நம்மள ரொம்பவே சோர்வாகி விட்டது. அதை தாண்டி 7வது மண்டபம் போனம் அது வெறும் ஒரு இளைப்பாற கூடிய ஒரு மண்டபம் தான் வேற ஒன்னுமே கிடையாது. 8வது மண்டபம் ரொம்ப சிரமம் கொஞ்சம் நடந்து போற மாதிரி இருக்கும் 15 நிமிடம் வரை ஆகலாம். நீங்க கவனமாக போகனும். அந்த 8வது வாசல் இடி விழுந்ததால் இரண்டாக ஆகிவிட்டது.


அதனால அதுக்கு இடி விழுந்தான் பாறைனு பெயர் அத தாண்டி இடது பக்கம் ஒரு கட்டிடம் இருந்துச்சு அது 1800-ல் வெள்ளைக்காரங்க வெடிமருந்து கிடங்காக பயன் படுத்திருக்காங்க, பிரம்மாண்டமா இருந்தது.


ஒரு பக்கம் வெடிமருந்து நிரப்பவும் மறுபக்கம் போர் வந்தால் வெடி மருந்து எடுக்கவும் பயன் படுத்திருக்காங்க. இந்த கிடங்கு இப்போ அழிஞ்சிட்டு வருது, 9 வது வாசல் போறதுக்கு முன்னாடியே சின்ன ஒரு ஒத்தையடி பாதை போகும் அதுல போன சங்ககிரியை அவ்வளவு அழகா ரசிக்க முடியும.; எங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப அசதியாக இருந்துச்சு, இதுவரைக்கும் 3.30 மணி நேரம் ஆனது, 8 வது வாசல் முடிக்க சிலருக்கு பசிச்சுச்சு நாங்க பிஸ்கட் எல்லாம் கொண்டு போயிருந்தோம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக காலியானது.



9வது கோட்டை போனதும் அது ரொம்பவே ஆச்சரியமா இருந்தது ஏன்னா இது மிக உயரமாவே கட்டி இருந்தாங்க அவ்வளவு பாதுகாப்பா இருக்கிறதுக்காக கட்டி இருந்தாங்க,


இந்த கோட்டை வாசல் மிக பெரிய கதவு இருந்திருக்கு ஆனா இப்போ வெறும் குந்தாணிகள் மட்டும் தான் இருந்தது, அந்த வாசலை தாண்டி போனோம் ஒரு நிமிடத்திலேயே பத்தாவது வாசல் வந்திருச்சு. இது தான் இந்த கோட்டையோட கடைசி வாசல். இதை தாண்டிடா மலை உச்சிக்கு போயிறலாம்.


பத்தாவது வாசல் நுழையும் போது பூதம் முகம் மற்றும் கஜேந்திரா மோட்சம் பொறிக்கப்பட்டிருக்கும், அப்படியே உள்ள தாண்டி போனா எந்த திசையில் இருந்து பார்த்தாலும் ஒரு குரங்கு உருவம் தெரிகிற மாதிரி ஒரு சிற்பம் செதுக்கி வச்சிருந்தாங்க. அந்த வாசல தாண்டி மலை உச்சிக்கு போக ஆரம்பிச்சோம்,

போற வழியில சின்னதா ஒரு குளம் மாதிரி நீர் தேங்கி இருந்தது அதையும் தாண்டி கொஞ்சம் மேல ஒரு அஞ்சிநேயர் கோயில் இருந்தது. அந்த கோவில் நல்லாவே இருந்துச்சு ஒரு சிலை கூட இருந்துச்சு ஆனா சின்ன கோவில் தான்


அதையும் தாண்டி போனா இன்னொரு குளம் இருக்கும் இந்த கோட்டையில்; நிறைய நிறைய நீர் சேமிச்சியிருக்காங்க,


மிக பெரிய கோட்டையாக இருக்குறதுனால நிறைய பேர் இருந்துருப்பாங்க அவங்க தேவைகளுக்குனு ஒரு குளம் குதிரை போன்ற விலங்குகளை பராமரிப்பதற்கு ஒரு குளம் உணவு சமைக்க ஒரு குளம் அப்படினு பிரம்மாண்டமான ஒரு சம்ராஜ்யமா வாழ்ந்திருக்காங்க,


இன்னும் கொஞ்ச தூரம் போன ஒரு கோயில் வந்தது அது சென்ன கேசவ பெருமாள் கோவில் அப்படினு சொல்லுவாங்க. ஒரு பெருமாள் கோவில் கீழ இருக்குன்னு சொன்னேன், அதாவது மூணாவது கேட் தாண்டி வந்தா வரதராஜ பெருமாள் கோவில். அந்த கோவிலுக்கு தான் மக்கள் அடிக்கடி வருவாங்க திருவிழா அப்போ கீழ இருக்கிற பெருமாளை மேல கொண்டு வருவாங்க நாங்க போன அப்போ மேல யாரும் இல்லை ஒரு சின்ன ஓட்டை வழியாக பார்த்தேன் சாமிய. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு கிளம்பினோம்.


தொல்லியல் துறை போர்டு எதுவும் வைக்கல அதனால நமக்கு பாதை கண்டுபிடிக்கிறது கஷ்டம், ஆனா அந்த காலத்தில கிட்டதட்ட ஒரு 500 ஆண்டு முன்னாடி ஒவ்வொரு இடமும் மிக முக்கியமான ஒன்னா இருந்திருக்கு. தளபதி தங்கியிருந்த இடம் தண்டனை மற்றும்; மக்கள் தங்க ஒரு இடம் என்று இருந்திருக்கு. அந்த பெருமாள் கோவில் தாண்டி மலை ஒட்டி எறங்கணும் அங்கயும் ஒரு தர்கா இருக்கு,


இந்த கோட்டை திப்பு சுல்தான் கீழ் ரொம்ப காலம் இருந்தது அதனால இஸ்லாமியர்கள் வழிபடான ஒரு தர்கா இருந்தது. மலைக்கு கீழே இருந்து பார்த்தாலே பச்சை கலர்ல தர்கா நல்லாவே தெரியும். அந்த தர்காவில இருந்து மலை மேல் நோக்கி போனோம்னா சின்னதா 6க்கு 6 ங்கற அளவுல ஒரு அறை கருங்கல் வைத்து அடுக்கி கட்டப்பட்டிருந்தது, அது வந்து ஆள் இறக்கும் குழி. அந்த காலத்தில் நிறைய கொடூரமான தண்டனைகள் கொடுத்தாங்க, அதாவது அவங்க எதிரியை அந்த குழிக்குள் இறக்கி மூடிடுவாங்க. சோறு தண்ணி எதுவும் போடாமல் பல நாட்கள் பசியாலும் பட்டினியாலும் தண்டனைக்கு உரியவர் இருட்டிலேயே செத்து போயிடுவாங்க.


அவங்க இறந்த பின்பு பிணத்தை தூக்கி கழுகுக்கு இறையாக போட்டுருவாங்க அவ்வளவு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டுருக்கு. அந்த ஆள் இறக்கும் குழியை அப்படியே தாண்டினால் தோல் உரித்து மண்டபம்னு ஒரு இடம் இருக்கு, அங்கு தவறு செய்தவர்களை தோலை உரித்து மலை மேல இருந்து தள்ளி விட்டுறுவாங்க.

அதுக்கும் கொஞ்சம் மேல போன தூக்கு மண்டபம் இருக்கும். மாவீரன் தீரன் சின்னமலையை இங்கு தான் தூக்கில் போடுவாங்க வெள்ளைக்காரங்க. 31.07.1805 அன்று பொய் புகார் செலுத்தி தூக்கிலிடப்பட்டார் தீரன் சின்னமலை, ரொம்பவே வருத்தமான விஷயம் அவர் மட்டுமல்ல பல போர் வீரர்கள், நம் மக்கள், நம் அரசர்கள் என அதிகமான பேர் கொல்லப்பட்டு இருக்காங்க இந்த சங்ககிரி கோட்டையில. பல போர்களை இந்த கோட்டை கண்டுருக்கு நிறைய போரில் கை மாறி இருக்கு.


பக்கத்திலேயே சேமிப்பு கிடங்கு உள்ளது அது தான் முக்கியமான ஒன்று அது ஒரு உணவு கிடங்கு அனைத்து சமையல்; பொருள்களும் சேமித்து வைப்பாங்க. பக்கத்தில் எண்ணெய் கிடங்கு இருக்கு ஆனா இந்த இரண்டும் இப்போ சேதம் அடைந்திட்டு வருது. சரி கீழ இறங்கலாம் அப்படினு எல்லோரும் இறங்க ஆரம்பித்தோம். கீழ 1 மணி நேரத்தில இறங்கிட்டோம். கீழ வந்து கோட்டையை பார்த்தேன் ஏறுவதற்கு முன் இருந்த அனுபவத்தை விட இப்ப ரொம்பவே மாறுபட்டு இருந்தது.


ஒரு வரலாறு இருந்த இடத்தை பார்த்த பின்தான் இங்க தான நம்ம சின்ன மலைய தூக்கில போட்டுரப்பாங்க, இங்க தான பயிற்சி எடுத்திருப்பாங்க இங்க தான எல்லோரும் தங்கியிருப்பாங்க, இங்க தான சமைத்திருப்பாங்க, இங்க தான தண்ணீர் குடிச்சிருப்பாங்க அப்படிங்கிற எண்ணம் எல்லாம் என் கண் முன்னாடி வந்து போனது,


மிக பெரிய சாம்ராஜ்யம் இயங்கி கொண்டு இருந்த கோட்டை இப்போ இயற்கை மேகம் மட்டுமே தழுவி போயிட்டு இருக்கு, ரொம்பவே வருத்தமா இருந்துச்சு நிறைய மக்கள் இங்கு வரவில்லை ரொம்ப வருத்தமா இருக்கு. சேலம் சுற்றியுள்ள மக்கள் கீழ இருக்குற பெருமாள் கோவில் வரைக்கும் வராங்க மேல விடுமுறை நாட்களில் அப்புறம் முக்கியமான விழா நாட்களில் மட்டும் போறாங்க சேலத்தில் முக்கியமான கோட்டை.


இந்த சங்ககிரி கோட்டை எனக்கு 8 மணி நேரம் ஆனது உங்களுக்கு 2 அல்லது 3 மணி நேரத்தில் ஏறலாம் 1 மணி நேரத்தில் கீழே இறங்கலாம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். இந்த இடத்தை பற்றி நம்ம Youtubeல இருக்கு அங்க போய் பாருங்க இன்னும் அனுபவம் கிடைக்கும். நீங்க நேரில் போய் நான் சொன்ன வரலாற்றோட அந்த இடத்தை பார்த்தா உங்கள் வாழ்க்கையில இந்த கோட்டையை மறக்கவே மாட்டிங்க. இதே மாதிரி மிக பெரிய சாம்ராஜ்யம் நடந்த இடங்களை அடுத்த பதிவுல பார்க்கலாம்..


404 views
bottom of page