top of page

கன்னியாகுமரி மாத்தூர் தொட்டி பாலம்

தமிழ்நாட்டிலேயே இயற்கை எழில் மிகுந்த மாவட்டங்கள்ல கன்னியாகுமரி முக்கியமான மாவட்டம் அது போக தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா தலம். அந்த கன்னியாகுமரில தான் ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் இருக்கு. அது தான் மாத்தூர் தொட்டி பாலம். இன்னைக்கு அந்த பாலத்தை பத்தி தான் பாக்க போறோம்.


இந்த பாலம் எங்க இருக்குனு பாதீங்கனா மாத்தூர் அப்படிங்குற கிராமத்தில இருக்கு அதனால தான் இந்த பாலத்திற்கு மாத்தூர் தொட்டி பாலம்னு பெயர் வந்துச்சு. நாகர்கோவில்ல இருந்து சரியா 26 கிலோமீட்டர் தூரத்தில இருக்கு. இந்த பாலம் எப்ப கட்டப்பட்டதுனா காமராஜர் ஐயா காலத்தில 1962ல கட்டப்பட்டது. 1962ல ஆரம்பிச்சு 1969ல இந்த பாலம் கட்டி முடிக்கிறாங்க.


இந்த பாலத்திற்கு ஏன் தொட்டி பாலம்னு பெயர் வந்ததுனா இது பார்ப்பதற்கு தொட்டி போல தாங்க இருக்கும். தரை மட்டத்தில இருந்து 115 அடி உயரத்தில இருக்கு, 28 தூண்கள் இந்த தொட்டி பாலத்தை தாங்கிட்டுருக்கு. 1969ல கட்டப்பட்டதுனு சொன்னேன்ல அப்பவே 12லட்சத்து 90ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இந்த பாலத்தை கட்டிருக்காங்க. 28 தூண்கள் இந்த பாலத்தை தாங்கிட்டு இருக்கு, அந்த ஒவ்வொரு தூண்களும் 32 அடி அகலம் இருக்குங்க. இந்த பாலத்தின் மொத்த நீளம் 1204 அடி, கடல் மட்டத்தில இருந்து 115 அடி, தரைமட்டத்தில இருந்து 104 அடி உயரமான பாலம். அடி, தரைமட்டத்தில இருந்து 104 அடி உயரமான பாலம்.


இது தண்ணி ஓடி வர்ற சின்ன தொட்டி தாங்க, அந்த தொட்டி நடுவுல ஓடுற ஆற்றை கடக்குறதுனால பாலம்னு சொல்லுறோம். இந்த பாலத்துல நடந்து போற பாதை ரொம்பவே சின்னது, அதனால கவனம் போகனும், கொஞ்சம் தடுமாறுனா கீழ விழுந்துருவோம் ரொம்பவே ஆபத்தான பாலம்.

இவ்வளவு உயரமான பாலம் எதுக்காக கட்டுனாங்கனா 2 ஊர்களுடைய வறட்ச்சியை நீக்குவதற்காக நம்ம காமராஜர் ஐயா கட்டிருக்காரு, எந்த ஊருனா ஒரு பக்கம் கல்குளம் மறுபக்கம் உழவன்காடு. இந்த இரண்டு ஊர்களும் மிகப்பெரிய வறட்சில இருந்துச்சு 1962ல.

இந்த ஊர் வறட்சியை போக்குறதுக்கு தான் பேச்சிப்பாறை அணையில இருந்து கோதை ஆறு வழியா தண்ணி கொண்டு வந்து இந்த 2 ஊர்களுக்கு வறட்சியை போக்குனாரு நம்ம காமராஜர் ஐயா. இந்த பாலத்தை கடந்து போற தண்ணீர் தேங்கா பட்டிணம் வரைக்கும் போயி கடல்ல கடக்குது.


இந்த பாலத்துக்கு கீழே ஒரு ஆறு ஓடுது இந்த ஆற்றுக்கு பெயர் பரளி ஆறு அப்படினு சொல்லுவாங்க இந்த பரளி ஆறு சிலப்பதிகாரத்தில கூறப்படுகிறது அவ்வளவு பழமையான ஆறு. இந்த பாலம் இரண்டு ஊர்களை மட்டும் இணைக்கிறது கிடையாது, இரண்டு மலைகளையும் இணைக்குது கனியான் மலை மற்றும் கூட்டுவாயி மலை அப்படிங்குற இரண்டு மலைகளை இணைக்குது.



இந்த பாலத்து மேல நடந்து வரதுக்கு ஒரு பாதையும் 10 அடிக்கு கீழ நீர் போறதுக்கு பாதை இருக்கு. சுற்றுலா பயணிகள் அதிக அளவுல வரக்கூடிய ஒரு முக்கியமான சுற்றுலா தலமா நம்ம கன்னியாகுமரில இருக்குற மாத்தூர் தொட்டி பாலம் விளங்குது. இந்த பாலம் கட்டப்பட்டப்போ ஆசியாவிலே உயரமான பாலம் தான் ஆன இப்போ நிறைய உயரமான பாலம் பல நாடுகள் கட்டிட்டாங்க.


வாகனம் நிறுத்துவதற்கு தனியா இடம் இருக்கு, பார்க்கிங் கட்டணம், நுழைவு கட்டணம் உண்டு. நிறைய கடைங்க நிறையா இருக்கு.

87 views
bottom of page